Advertisement

Breaking News

பிராணிகளின் உயிரைக்காக்க போராடுகிறார்கள் மதுரை பேஸ்புக் நண்பர்கள்

பிராணிகளின் உயிரைக்காக்க போராடுகிறார்கள் மதுரைபேஸ்புக் நண்பர்கள்




                                              பிராணிகளின் உயிரைக்காக்க போராடுகிறார்கள் மதுரையை சேர்ந்த   மதுரை பேஸ்புக் நண்பர்கள் இவர்களில் பலர் கல்லூரி மாணவர்கள், சிலர் பகுதி நேரமாக பணிபுரிபவர்களுக்கு முதலில் அச்சாரம் போட்டவர் பிரபாகரன் நாகராஜன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார் அந்த வேலையை விட்டுவிட்டு தெருவோரங்களில் ரோடுகளில் அடிபட்டு கிடக்கும் பிராணிகள மீட்கும் பணியை நண்பர்களுடன் சேர்ந்து செய்யத் தொடங்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அணில் பறவைகள் தெரு நாய்கள் பூனைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்களின் உயிர்களை காத்து இருக்கிறார்கள். பிரபாகரன் நாகராஜனிடம் பேசினோம் ரோட்டோரம் நோய்வாய்ப்பட்ட அல்லது வாகனத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடும் உயிரினங்களை முதலில் அரசு கால்நடை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்வோம்அங்கு முடியாது என்றால் அடுத்து தனியார்  பெட் க்ளினிக் கொண்டு செல்வோம் ஒரு சதவீதம் வாய்ப்பு இருந்தால் கூட சர்ஜரி செய்து பிழைக்க வைத்து மற்றவர்களுக்கு கொடுத்து விடுவோம். வெளிநாட்டு நாய் குட்டியாக இருக்கும் அவற்றின் கூட்டிட்டு போக வேண்டும் அதற்காக நேரம் ஒதுக்க வேண்டும் தேவையானது கொடுக்க வேண்டும் சிலருக்கு ஏற்படும் இவர்களுக்கு பிடிக்காது இது போன்ற பல்வேறு காரணங்களால் பராமரிக்க முடியாது. என்ற கட்டத்தில் பிராணிகளை ரோட்டில் விட்டுச் செல்வது அதிகரித்துள்ளது. சென்னை பெங்களூர் போன்ற பெருநகரங்களில்  காப்பகம் செயல்பட்டுவருகின்றன   ஒரு போன் செய்தாலோ ஃபேஸ்புக்கில் அடிபட்டு கிடக்கும் விலங்கின் வீடியோ போட்டாலும் போதும் மீட்க பலரும் ஓடோடி வருவார்கள்.

                   மதுரை போன்ற ஊர்களில் இன்னும் அது போன்ற விழிப்புணர்வு வரவில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்  பொதுவாக நாய்களை ஆசையாகவே  வளர்க்கிறார்கள். சிலர்  குட்டிகளை விற்று விடுகிறார்கள் குட்டி ஈன முடியாவிட்டால் அவைகளின் கடைசி புகலிடம் ரோடுதான். செல்லப்பிராணிகளை வளர்க்க முடியாவிட்டால் ரோட்டில் விடாமல் இவ்வர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் கொடுக்கலாம் தொடர்புக்கு : 7708433659


பிரபாகரன் நாகராஜன் அவர்களுக்கு  தமிழ் இணையதள செய்திகள் சார்பாக வாழ்த்துக்கள்.

No comments