Advertisement

Breaking News

கடக்நாத் (எ) கருங்கோழி வளர்ப்பு மூலம் மாதம் 50,000 வருமானம் .

                                           கடக்நாத் (எ)  கருங்கோழி 
                        வளர்ப்பு மூலம்  மாதம் 50,000 வருமானம் 





                                    கடக்நாத் கருங்கோழி இதன் பூர்வீகம் மத்திய பிரதேசம். இங்கு தான் இது அதிகம் காணப்படுகிறது. இந்த கோழி அனைத்து வித சூழலுக்கேற்பவும் தாங்கி வளரக்கூடியது. அதிக எதிர்ப்பு சக்தியும் இதிலும் உண்டு. இதன் சராசரி எடை சேவல்  ஆறு மாதத்திற்கு ஒன்றரை கிலோ வரை இருக்கும்.  பெட்டை கோழி ஒரு கிலோ வரை வளரும் தன்மை கொண்டது. இந்த கடக்நாத்  வருடத்திற்கு  100லிருந்து 150 முட்டைகள் வரை இடும். இந்த கோழி அடை காக்கும் திறன் மிகவும் குறைவு அதனால் இதனை இந்த கோழி இனம் படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது.                                                               

                                       இந்த கோழியில்  நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. கோழியின் முட்டை இன்குபேட்டரில் அல்லது மற்ற கோழியின் முட்டையுடன் சேர்த்து அடை காக்க வைக்க முடியும். இதை வாங்கி விற்க நினைக்கும் நினைப்பவர் இவைகளை வாங்கி தொழில் செய்ய நினைப்பவர்கள். ஒரு மாதத்திற்கு மேலான கோழியை வாங்கி தொழில் செய்வது சிறந்தது. இவ்வகை கோழிக்குஞ்சுக்கு  தீவனமாக கடைகளில் இருக்கும் மற்ற தீவனங்களை கொடுப்பதற்கு பதிலாக கம்பு மக்காச்சோளம், கேழ்வரகு போன்ற இயற்கை தானியங்களை கொடுத்து வளர வைப்பது மிகவும் சிறந்தது. இதனால் இதன் இயற்கை குணங்கள் மாறாமல் நிலை தன்மையுடன் இருக்கும்.

                                            இந்த கருங்குழி கருங்கோழி 6வது  வாரத்தில்  முட்டையிட துவங்கிவிடும் . முட்டைகள் 6 முதல் 8 வரை இடம் இடும் முதல் வாரத்தில் முட்டையிடும் இதிலிருந்து அடுத்த இரண்டு வாரம் கழித்து மறுபடியும் முட்டையிட ஆரம்பித்து விடும் தன்மை கொண்டது. இந்தக் கோழியின் இறைச்சி மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இந்த இறைச்சியில் மிகவும் புரதச் சத்து அதிகம் உள்ளது. அதேபோன்று கொழுப்புச் சத்து மிகவும் குறைவு அதனால்  எல்லா வகை வயதினரும் இதனை உண்ணலாம்.




                                 மைசூரில் இருக்கும் கால்நடை மருத்துவ கழகம் இந்த இறைச்சியில் அதிகப்படியான மருத்துவர் மருத்துவ குணம் உள்ளது. என அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதனால் இது இந்த கோழியின் உற்பத்தியை எடுக்க முடிவு செய்துள்ளது. நரம்பு சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு இந்த இறைச்சி மிகவும் ஏற்றது எளிதாக குணமாக கூடியதும் கூட இந்த கோழியின் முட்டையும் சிறந்த மருந்துப் பொருளாக உள்ளது. சளி மற்றும் இருமல் உள்ளவர்களுக்கு இந்த கோழி முட்டையை குடித்துவர குணமாகும். என கண்டறியப்பட்டுள்ளது. எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு இந்த கோழியின்   வெள்ளை கரு மருந்து பொருளாகவும் விரைவில் குணப்படுத்த கூடிய பொருளாகவும் செயல்படுகிறது. 


                                           மேலும் குழந்தைகளுக்கு இந்த முட்டையை சமைத்து தருவதன் மூலம் குழந்தைகள் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பது  உறுதி. இதில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது பெண்களுக்கான பிரச்சனைகள், ஆஸ்துமா, இரத்த கொதிப்பு ,இதய நோய் அனைத்து வியாதிகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதன் முட்டைகள் தீராத தலைவலி அதிகப்படியான தீராத பிரச்சனைகளை மருந்தாக பயன்படுகிறது. இதன் உற்பத்தி மிகவும் குறைவு என்பதால் இதன் விலை சற்று அதிகம் பராமரிப்பு என்பது நாட்டுக்கோழி வளர்ப்பு முறை போன்றுதான்.

                          கடக்நாத் கருங்கோழி
 ஒரு கோழிக்குஞ்சு விலை ரூபாய் 80
ஒரு மாத கோழிக்குஞ்சு  விலை ரூபாய் 150 
மாத கோழி  ரூபாய் 250 

           பண்ணை அமைக்கும் முறை  20 அடிக்கு 40 அடி வீதம் உள்ள பண்ணையில் சுமார்  100 கோழிகள் வளர்க்க முடியும்.

3 comments:

  1. Pls give contact to buy karungozhi in chennai area

    ReplyDelete
  2. Give me the address for buying.. Please

    ReplyDelete
  3. Gopal
    Kangayam
    tiruppur distric tamilnadu
    9842223322

    ReplyDelete